ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தலைநகரான அபுதாபியில் சிவிலியன் வசதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்துள்ளது.
"பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக "தொடர்ச்சியான விழிப்புணர்வின்" அவசியத்தையும் இலங்கை மீண்டும் வலியுறுத்தியது.
ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹூதி குழு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது, அங்கு எரிபொருள் தாங்கிய வண்டிகள் வெடித்ததில் மூன்று பேர் பலியாகியது மற்றுமின்றி பிராந்தியத்தின் வணிக மற்றும் சுற்றுலா மையத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையம் அருகே பாரிய தீயை ஏற்படுத்தியது.
எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அருகே தொழில்துறை முசாஃபா பகுதியில் மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று அபுதாபி பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்கள் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முசாஃபா மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் சிறிய விமானங்களின் பாகங்கள் கண்டறியப்பட்டதுடன், இவைகள் ஆளில்லா விமானங்களாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் ஏவுகணைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)