நீதியமைச்சர் மற்றும் பன்னலோக தேரருக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் அலி சப்ரி தன்னை இழிவுபடுத்தியதற்காக 1500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடந்த மே மாதம் 27ஆம் திகதி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
பிரதிவாதியை சமூக ஊடகங்களில் அவமதிப்பதைத் தடுக்கவும், அவமதிப்புக்கு இழப்பீடு கோரியும் மனுதாரர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி அருண அலுத்கே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)