ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையும் தரப்பினருடன் எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைத்துக் கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தேர்தலை பிற்போடும் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். தேர்தல் நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் சில மாதங்களில் பலமிக்க கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டியெழுப்பப்படும். எங்களுக்கென்று ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். எங்களது வேலைத்திட்டங்களுடன் இணையும் தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்படும்.
எவ்வாறாயினும் இது தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை எனவும், இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.