மின்சார விநியோகத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என CEBEU பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டின் சில மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படுவதால் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மின்வெட்டு பற்றிய எச்சரிக்கைகளை தொடர்ச்சியாக விடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தேவையான எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.