கொரோனாவுக்கு எதிரான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களாக இலங்கையில் இனி அங்கீகரிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (24) அறிவித்தார்.
மக்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுவதற்கு தங்களது முதலாவது, இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸ்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.