ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மீண்டும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இல்லாமல் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியினால் இன்று முழு நாடும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், மேலும் அந்த கட்சி தொடர்பில் ஏமாற்றம் அடையாதவர்கள் எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையவழி சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஜனாதிபதியாக இருந்தபோது அமைதிக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்பை அப்போதைய அரசாங்கம் பறித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அமைதிக்கான நோபல் பரிசை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குமாறு குழுவினர் விடுத்த கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)