பயாகல தியலகொட பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட பேருந்து ஒன்று கொஸ்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து தியலகொட பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில் ஒரு கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (8) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பயாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பஸ் காலி வீதியில் பயணித்துள்ளதாக சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, கைவிடப்பட்ட பேருந்து கொஸ்கொட பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. (யாழ் நியூஸ்)