அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், அரிசியின் விலை மேலும் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பெரும்பாலான கடைகளில் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ரூ. 160 முதல் 180 வரையும், நாட்டு அரிசி ரூ. 170 முதல் 190 வரையும், சம்பா அரிசி ரூ. 230 முதல் 260 வரையும் விற்கப்படுகிறது.
மேலும் அரிசி விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து சில வியாபாரிகள் அரிசியை தன்னிச்சையான விலைக்கு விற்று மக்களை சுரண்டுவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)