நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு முறைகளைில் அரசாங்கத்தை விமர்சிக்க முடியும். ஒன்று முறையாக விமர்ச்சிக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் இழிவுப்படுத்தும் வகையில் விமர்சிக்கலாம்.
அனைத்து விடங்களையும் அரசாங்த்தை விமர்ச்சிப்பது சாதாரண விடயமல்ல. உதாரணமாக சீமெந்து விலை அதிகரித்ததுக்காக அரசாங்கத்தை திட்ட முடியாது. கடந்த காலங்களில் சீமெந்து இறக்குமதி செய்யும்போது கப்பலுக்கான கட்டணமாக 1500 டொலர் செலுத்தப்பட்டது.
ஆனால், தற்போது கப்பலுக்கான கட்டணம் 15 ஆயிரம் டொலராக அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு இறக்குமதியும் அவ்வாறானதொரு நிலைமையையே சந்தித்துள்ளது.
உர இறக்குமதிக்கு தடை விதிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தபோது, ஒன்றரை வருடத்துக்கு தேவையான இரசாயன உரம் நாட்டில் இருந்தது. அதனை முறையாக மக்களுக்கு பகிர்ந்தளித்தால் இந்த நிலைமை ஏற்படுவதற்கான வாய;ப்பு இல்லை. அதனால், சகல விடயங்களுக்கும் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது.
உர விநியோகம் முறையாக கிடைக்காமைக்கு ஜனாதிபதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்காக ஜனாதிபதியை குற்றஞ்சொல்லவும் முடியாது. அதிகாரிகளின் செயற்பாடுகளின் காரணமாகவே அரசாங்கம் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆகவே, அரசாங்கம் மீதாக விமர்சனங்கள் முறையாக அமைய வேண்டும்.
கட்சிக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும் கூட்டணிக்குள் ஒழுக்கமான செயற்பாடுகள் இருக்கவேண்டும். அதனால் இந்த வருடத்தில் ஜனாதிபதி நேரடியான தீர்மானங்களை எடுப்பாா். இல்லாவிட்டால் இந்த பயணத்தை செல்லமுடியாது. இதுதொடர்பில் அமைச்சரவையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றாா்.
-தமிழன்