பிரதமரின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றிய ஒருவர், பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகக்கூடிய ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
மேலும், பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொஹான் வெலிவிட்ட, இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை.
மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் எனக்குத் தெரிந்த வகையில் தவறானவை என்றார்.