நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கு இதுதான் காரணமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கு இதுதான் காரணமா?


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணியளவில் அறிவித்தார்.


பின்னர் ஐஸ்வர்யாவும் பிரிவை உறுதிப்படுத்தி தனியாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.


தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.


இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.


இதுவரை இவர்களுக்கு இடையே எந்தவொரு கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதில்லை.


இந்நிலையில் திடீரென இவர்கள் பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.


ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனுஷ் - ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது பிரிவுக்கு இது காரணம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.


தனுஷ் சமீபகாலமாக இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது. இந்தி படங்களில் நடிப்பது தொடர்பாக அவர் ஐஸ்வர்யாவுடன் எதுவும் கலந்து ஆலோசிப்பது இல்லை தன்னிச்சையாகவே முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.


தனுஷ் அவர் நடிக்கும் படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நெருங்கி பழகியதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த பிரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.


அண்மையில் 'மில்க்' நடிகை ஒருவருடன் தனுஷ் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுகள் வெளியாகின. அந்த நடிகையின் வீட்டிலேயே அவர் எப்போதும் இருப்பதாகவும் கூறப்பட்டது.


மேலும் தெலுங்கு நடிகை ஒருவரிடமும் தனுஷ் நெருக்கம் காட்டி வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததும் அவர் தனுசை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும் தனுஷ் அதை கேட்கவில்லை என்றும் சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


இதனை தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேரள முன்னணி நடிகை ஒருவர் நடித்துள்ளார். அவருடனும் தனுஷ் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு பரவியது. இந்நிலையில் அந்த நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து தனுஷ் தனக்கு தொல்லை கொடுப்பதாக முறைப்பாடு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கு இதுவே காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதையடுத்து இருவரும் பரஸ்பர நண்பர்களாக பிரிய தனுஷ் - ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


முதலில் இது பற்றி வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் திட்டமிட்டு இருந்தனர் என்றாலும் நேற்று இரவு திடீரென இருவரும் தங்களது பிரிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.


-இந்திய ஊடகம்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.