டிக்டாக் வீடியோ தொடர்பான தகராறில் 17 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் வழியாக சில நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவருக்குத் தெரிந்த மற்றுமொரு இளைஞன் அவரை முதுகில் இருந்து கத்தியால் குத்தியதை அடுத்து, காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சமூக ஊடக தளமான டிக்டாக் இல் உருவாக்கப்பட்ட வீடியோ தொடர்பான தகராறில் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலியானவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)