சிவில் செயற்பாட்டாளர் நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்தமையால், உயர்தர மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாமல் போயுள்ளதாக இந்த மனுவின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்விதுறைசார் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளதாக மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிணங்க, குறைந்தது 20 வாரங்களேனும் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும் உத்தரவிடுமாறு மனுதாரர் நாகானந்த கொடித்துவக்கு தமது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.