வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக பணம் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் தற்போது வெளிநாட்டில் கல்வி பயின்று வருவதாகவும், அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கான பெரும்பாலான பணம் அவர்களின் பெற்றோரிடம் இருந்து அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் உள்ளூர் வங்கிகளில் டொலர்கள் இல்லாத காரணத்தால் தமது குழந்தைகளுக்கு பணம் அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றார். (யாழ் நியூஸ்)