இம்மாதம் (ஜனவரி) இதுவரையில் 5,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்த நோயாளர்களில் 60% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி மற்றும் குருநாகல் பிரதேசங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை டெங்கு நோயாளர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.
செப்டம்பரில் 1,370, ஒக்டோபரில் 2,979, நவம்பரில் 4,561, டிசம்பரில் 8,096 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)