நாட்டில் வெளிநாட்டு ஒதுக்கம் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, துறைமுகத்தில் கப்பல்களுக்கு தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மூலப்பொருட்களை உரிய நேரத்திற்கு பெற்றுக்கொள்ள முடியாமையால், கொள்வனவாளர்களுக்கு தங்களது உற்பத்திகளை உரிய காலத்தில் ஒப்படைக்கும் செயன்முறையில் ஏற்றுமதியாளர்கள் சவாலை எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாக, கொள்வனவாளர்கள் வேறு சந்தை வாய்ப்பை நாடும் அபாய நிலை உள்ளதாக இலங்கை கப்பல் பிரதிநிதிகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.