நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி முழு மின் உற்பத்திக்கு திரும்பினாலும் மின் நெருக்கடி முடிவுக்கு வராது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி மின்சாரம் தடைப்படுவதால் களனிதிஸ்ஸ மற்றும் யுகதனவி அனல்மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாகவும் இதனால் 300 மெகாவோட் கொள்ளளவை இழக்க நேரிடும் எனவும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது என்றார்.
கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று ஒரு மணித்தியாலமும், நாளை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)