பாணந்துறை, மாலபே மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் துண்டிப்புகள் பதிவாகாத போதிலும் மேற்படி பிரதேசங்கள் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று மாலை 4 கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு அமுலாகும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.
எனினும், ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில், எந்த வகையிலும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.