டயானாவுக்கு புத்திக்குறைபாடு ஏற்பட்டிருக்கிறது! -மைத்திரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டயானாவுக்கு புத்திக்குறைபாடு ஏற்பட்டிருக்கிறது! -மைத்திரி


ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இருவருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ள டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என்றே நான் கருதுகின்றேன். அவர் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டாலும் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடித்துக்கொள்ளவேண்டும் என்று நிலைப்பாட்டில் இருப்பதுபோல் தெரியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக நாட்டுமக்களுக்கு சேவையாற்ற முடியாதுபோன இருவருடகாலத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதியின் பதவிக்காலத்தையும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தையும் மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கவேண்டும் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமனே சபையில் யோசனையொன்றை முன்வைத்தார்.


அவரது யோசனையின் பிரகாரம் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் நீடிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அபிப்பிராயம் என்னவென்று வினவியபோதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார். 


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,


டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இருவருடங்களால் நீடிக்கவேண்டும் என்று டயானா கமகே கூறினாலும், இவ்விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? அவர் இதற்கு உடன்படவேண்டும் அல்லவா? ஜனாதிபதி இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருப்பதாக நான் கருதவில்லை.


அதுமாத்திரமன்றி எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் இதற்கு முன்னரொருபோதும் ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்ததால் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நான் ஜனாதிபதியாக இருந்தபோது எனது பதவிக்காலத்தைக் குறைத்துக்கொண்டேன். 


அந்தவகையில் வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தமது பதவிக்காலத்தை மீண்டும் அதிகரித்துக்கொள்வதற்கு முற்படுவார்கள் என்று நான் கருதவில்லை என்று குறிப்பிட்டார்.


நா.தனுஜா


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.