நாட்டில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது தமது கொள்கை விளக்க உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மின்னுற்பத்திக்காக 21 சதவீதமும், கைத்தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுகிறது. எனவே எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.