நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், சில கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளை திறப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதனால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் வெளியிலிருந்து உணவை எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததுடன், ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால், பெருமளவான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல பாடசாலைகள் குழு முறைமைக்கமையவே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
எனினும், புதிய நடைமுறைக்கமைய விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.