உள்நாட்டு விவசாயியை விட வெளிநாட்டு விவசாயியே அரசாங்கத்திற்கு விசேடமானவர் எனவும் இன்று அரசாங்கம் மக்களிடம் பணம் பறிக்கும் நிலைக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் யோசனையாக ஆரம்பிக்கப்பட்ட ‘சசுநட அருண’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்குட்பட்ட பெரகம 4 எல விசுத்தாராம ஆலயத்தில் கடந்த ஞாயிறு அன்று பாடசாலை கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்து வைத்தார்.
நுகர்வுப் பொருட்களின் விலைகள் தன்னிச்சையாக அதிகரித்து வருவதாகவும், இவற்றிற்கு அரசாங்கம் பொறுப்பு கூறாது இருப்பதாகவும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த சர்வாதிகார ஆட்சியில் ஒட்டுமொத்த விவசாயிகளும் நிர்க்கதியாகி இருப்பதாகவும், மக்களை அழிக்கவே இந்த அரசு உருவானது என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)