தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொவிட்-19 நோயை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையில் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார வழிகாட்டுதல்களை அவ்வப்போது புதுப்பித்து வருகிறோம்.
இதுவரை டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் அதனை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி நடக்குமாறு வைத்தியர் ஹேமந்த ஹேரத் பொமக்களை கோரியுள்ளார்.