இன்று முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 24 மணி நேர தினசரி கொரோனா தடுப்பூசி மையத்தை இலங்கை விமானப்படை நிறுவியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அல்லது பகுதியளவு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஃபைசர் Pfizer கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்காக இந்த தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியின் முதல், இரண்டாவது அல்லது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளார வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு இது வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் இன்று ஆரம்பித்துள்ளனர்.
இத்தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)