உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இதுவரை குடிநீர் கட்டணத்தை செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 நபர்கள் இருப்பதாகவும், அவர்களில் பத்து நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும் அமைச்சர் ஒருவரின் வீட்டின் நீர் நிலுவைத் தொகை ரூ. 2 மில்லியனைத் தாண்டியதாக வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டணங்களை விரைவாக செலுத்துவதற்கான இறுதி அறிவிப்புகளும் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டன.
இதன்படி, தொடர்ந்தும் கட்டணம் செலுத்தத் தவறிவரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)