மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்ட முதல் 12 மணித்தியாலங்களில் இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (16) நண்பகல் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரையிலான முதல் 12 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலை பாவனையாளர்களால் ரூபா 2,805,100.00 கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
கட்டணம் வசூலிக்கப்பட்ட முதல் 12 மணித்தியாலங்களில் மீரிகம தொடக்கம் குருநாகல் வரையிலான பாதையில் மொத்தம் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த 12 மணி நேரத்தில் போக்குவரத்து விபத்து எதுவும் ஏற்படவில்லை.
புதிதாக திறக்கப்பட்ட வீதியானது சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை 12 மணித்தியாலங்களுக்கு பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார். (யாழ் நியூஸ்)