டொலர் நெருக்கடி நாட்டிற்கு ஏற்பட்டுள்ள போதிலும் தேவையான நேரத்தில் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அளவு டொலர்களை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வழங்குவார் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் மிகவும் திறமையான நிதியமைச்சர் ஒருவர் இருப்பதாகவும், கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் பசில் ராஜபக்ஷ இல்லாவிட்டால் இந்த நாட்டிற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
'பசில் ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் வரை நாங்கள் டாலர்களுக்கு அஞ்சமாட்டோம். நான் எதற்கும் பயப்பட மாட்டேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். (யாழ் நியூஸ்)