மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட 21 வயதுடைய இளைஞர் ஒருவர் ஹோட்டலின் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சிறுவன் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு பொல்கொல்ல மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் உடஹொரொம்புவ, ரிதிகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விடுதியில் நண்பர்கள் குழு நடத்திய டிஜே பார்ட்டியில் மது அருந்திவிட்டு இளைஞர் கலந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர்கள் குழுவும் மது போதையில் நீச்சல் தடாகத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது நீச்சல் குளத்தில் எஞ்சியிருந்தவர்கள் கவனிக்காத நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)