அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது நடக்கும் விபத்துக்களை குறைப்பதற்கான திட்டத்தினை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன சாரதிகளுக்கு நித்திரை மயக்கம் ஏற்படுவதால் நடக்கும் விபத்துக்களை குறைப்பதற்காக வாகனங்களை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் உறங்கக் கூடிய இடவசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நெலுந்தெனிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து்க்கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும். இந்த ஓய்வெடுக்கும் இடங்களை அமைக்கும் போது காப்புறுதி நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டு மிகப் பெரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
நாளுக்கு நாள் வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் நடக்கும் விபத்துக்கள் வேகமாக அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. இலங்கையில் தினமும் சுமார் 8 கோர விபத்துக்கள் நடக்கின்றன.
காவல்துறையினருக்கு தெளிவுப்படுத்தி, நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களை தவிர்க்கும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.