அதேபோல், கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கும் நாட்டில் பண கையிருப்பு இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை சுதந்திரமாக நிர்ணயம் செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.