இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஆன்மீகத் தலைவர் அஷ் ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் இலங்கையில் பல முக்கிசதர்களையும் சர்வமத தலைவர்களையும் சந்தித்து நாட்டில் சுபீட்ச்சமான எதிர்காலத்திற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டுவிட்டு இன்று (01) நாடு திரும்பினார்.
மேலும் இன்று பண்டாரநாயக சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 07.30 மணியளவில் புறப்பட்டார்.
அன்னாரை வழியனுப்பி வைக்கும் முகமாக கொழும்பு நாராஹேன்பிட்ட அக்போதி விகாரையின் விகாராதிபதி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அதி சங்கைக்குரிய கெளரவ கலாநிதி கலகம தம்மாரன்சி நாயக தேரர், பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, வெளிவிவகார அமைச்சின் விஷேட விருந்தினர்களை உபசரிக்கும் அதிகாரி திரு. மனோஜ் மனம்பெரி அவர்களும் கலந்துக்கொண்டனர்.
இவர்களுடன் ஆன்மீகத் தலைவரின் ஏற்பாட்டுக் குழு தலைவர் அல்ஹாஜ் முஹீதீன் காதர், ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் அல்-ஹாஜ் முய்னுத்தீன் பின் முஹம்மத் உட்பட ஆன்மீகத் தலைவரை வரவேற்கும் குழுவின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.