இந்த விளையாட்டுக்கள் சில சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பாலான சிறுவர்கள் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அவர் நேற்று (01) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இந்த கணினி விளையாட்டுகளில் சிலவற்றை விளையாடுவதன் மூலம் சில சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்வதாக அவர் மேலும் கூறினார்.
இந்த விளையாட்டுக்களை தடை செய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)