பதுளை சிறைச்சாலையில் விசேட சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் நால்வர், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேநகபர்கள் நால்வர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேநகபர்கள் நால்வர் மீதே, கைதிகள் நால்வரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதியன்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்றையதினம் இரவு உணவைப் பெற்றுக்கொள்வதற்காக, சந்தேநபகர்கள் நால்வரும் வரிசையில் நின்றுள்ளனர். அப்போது, கேரம் போர்டில் ஒரு பிரேம் உடைந்ததுகொண்டு வந்து, வரிசையில் நின்றுகொண்டிருந்த அந்த நால்வர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.