சவூதி அரேபியா தப்லீக் ஜமாஅத்தினை பயங்கரவாத அமைப்பென தடை செய்யவில்லை, மாறாக பயங்கரவாதம் ஊடுருவுவதற்கான ஒரு வாயிலாக அமையலாம் என்று தான் இஸ்லாமிய விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை கோட்பாட்டுகள் நடைமுறைகள் அடிப்படையில் சவூதி முப்திகளும் உலமாக்கள் உயரவை அறிஞர்களும் தப்லீக் ஜமாத்தை நெறிபிரழ்ந்த அமைப்பாக கணித்துள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் அரபு முஸ்லிம் நாடுகளில் ஒரு அமைப்பு தடை செய்யப்படும் பட்சத்தில் இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தற்போதைய களநிலவரங்களின் பின்னணியில் ஒரு சில ஆலோசனைகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.