திருகோணமலை - கிண்ணியா படகு விபத்தில் 41 வயதுடைய பெண் ஒருவர் பலியானதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 23ஆம் திகதி கிண்ணியாவில் படகு கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட ஆறு பேர் ஆரம்பத்தில் உயிரிழந்தனர் .
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 07 வயது குழந்தை உயிரிழந்தது.
படகில் இருந்த 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிஞ்சாக்கேணி பாலம் கட்டப்படுவதால் குறிஞ்சாக்கேணி குளத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு மக்களை ஏற்றிச் செல்ல படகு பயன்படுத்தப்பட்டது.
விபத்து தொடர்பில் கிண்ணியா நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டார். (யாழ் நியூஸ்)