இவ்வாறு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம் என்றும், முஸ்லிம் இளைஞர்கள் ஆவேசமாக இதுபோன்ற செயல்களை செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக தகவல் இருப்பதாகவும், அதை கணக்கில் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக அறிக்கையை வாபஸ் பெற்று இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த பிரியந்த குமாரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டுக்குச் சென்றிருந்த போதே அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)