நாட்டில் இதுவரை 07 ஓமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், சமூகத்தில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் மூன்று வாரங்களில் இந்த வைரஸின் முக்கிய திரிபு ஓமிக்ரானாக மாறும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தற்போது பதிவான எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், புள்ளிவிவரங்கள் முற்றிலும் தவறானவை என்றும், இறப்பு எண்ணிக்கையில் கடுமையான சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பொருளாதார சூழ்நிலையால் நாடு மீண்டும் மூடப்படும் என எதிர்பார்க்க முடியாது என்றும், உணவின்றி இறப்பதை விட கொரோனாவால் இறப்பதே மேல் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், உயிரைக் காப்பாற்றுவது மக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)