உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்குரிய, 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு முடிவடையும்போது, குறித்த வங்கிகளின் மொத்த சொத்து பெறுமதிக்கேற்ப இந்த அனுமதிப்பத்திர கட்டணம் வேறுபடும் என்றும் இக்கட்டணத்தை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்த வேண்டும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.