நல்லாட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதிலும் அந்த மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தற்போது தேவைப்படுவது உள்ளூர்bபொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமே எனவும் இறுதியில் அரசாங்கம் செய்யும் எதிலும் இணையப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் தேவையில்லை என்றும், கடந்த ஆட்சியை விட தற்போதைய அரசு சிறப்பாக இருக்கும் என்று நம்பி, தமது கட்சி ஆதரவளித்ததாகவும் அவர் கூறினார்.
பொலன்னறுவை, மனம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)