மஹிந்த ராஜபக்ச தமது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராமயவில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது தேரர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு சரியான தொலைநோக்குப் பார்வை இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள சிலர் அதற்கு இடையூறாக செயற்படுகின்றனர்.
பிரதமர் போவதென்றால் எங்களிடம் சொல்வார். இது மஹிந்த ராஜபக்சவை விரட்டுவதற்கான சதியா என எங்களுக்குத் தெரியாது. இன்று நாட்டில் சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதியை சுற்றி இருப்பவர்களால் நாட்டை கொண்டு செல்ல முடியாது. சகோதரர்கள் ஒன்றாக டொலரின் பின்னால் செல்ல வேண்டாம்.., இருப்பவர்களை மாற்றினால் நாட்டை கட்டியெழுப்பலாம். நடக்கப்போவதை தடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றால் சரிவராது.. மஹிந்த ராஜபக்ச இதில் இருக்க வேண்டும். போக முடிவெடுத்திருந்தால் உடனே அதனை கைவிடவும் என்றார்.