ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பனவற்றை மறுசீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 527 அரச நிறுவனங்களில் இந்த ஐந்து நிறுவனங்களுக்கான அரச உதவிகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புச் சபை அரசாங்கத்திடம் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.
2006 முதல் 2020 வரை 527 அரச நிறுவனங்களில் 77 நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 1.2 டிரில்லியன் ரூபா எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)