ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் சமூக ஊடக பதிவுகளை கண்காணிக்கும் factcrescendo இணையதளம், இந்த செய்திகள் முற்றிலும் போலியானது என்று கூறுகிறது.
அதேநேரம், இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் முன்னிலையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக அறிவிக்கப்படும் என கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை எவ்வாறு நியமிக்கலாம் அதேபோன்று அவரை பதவியில் இருந்து நீக்குவது எவ்வாறு என்பது அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக திரு.கின்சி ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)