கண்டி, மடவளைப் பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட லிட்ரோ வகை வாயு சிலிண்டர்களில் வாயு கசிவு காணப்படுவதாக வீட்டுப் பாவணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மடவளை தெல்தெனிய வீதியில் உள்ள வீடு ஒன்றில் உரிமையாளர் ஒருவர் சந்தேகத்தில் தமது சிலிண்டரை பரிசோதனை செய்த போது அதில் கசிவு காணப்படுவது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் உடனடியாக அதனை அகற்றியுள்ளார்.
இதனால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கசிவு தொடர்பான அவசர தொலைபேசி சேவையான 1311 ற்கு இரண்டு தினங்களாகத் அழைப்பு எடுக்க முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன் சிலிண்டரைக் கொன்வனவு செய்ய முகவரோ அல்லது அதற்கான மாவட்ட முகவரோ எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தான் பணம் கொடுத்து வாங்கிய சிலிண்டரைப் பயன் படுத்த முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த 1ம் திகதியே அதனைக் கொள்வனவு செய்ததாகக் குறிப்பிட்டார். அவர் மேற்படி சிலிண்டரின் வாயிலில் பலூன் ஒன்றைப் பொருத்திய போது அது ஊதிப் பெருப்பதை படத்தில் காணலாம்.
எனவே மடவளைப் பிரதேசத்தில் சிலிண்டர்களைக் கொன்வனவு செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

-JM ஹபீஸ்
-ஜப்ஃனா முஸ்லிம்