ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் சில ஊடகங்களில் மாத்திரமே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதுவரையில் அவ்வாறான உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் தமக்கு கிடைக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.
இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து பி.பி.ஜயசுந்தர இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்ப தற்போதுய நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் அனுர திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. (யாழ் நியூஸ்)