மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கேகாலை மேல்நீதிமன்ற நீதிபதி ஆயம் முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது, 16 பிரதிவாதிகளுக்கான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது.
பிரதிவாதிகளுக்கான பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் குற்றபத்திரம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய விடயங்களை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி ஜகத்.ஏ கஹந்தகமகே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதி ஆயம், இது தொடர்பில் எதிர்வரும் சில நாட்களில் உத்தரவிடப்படும் என அறிவித்துள்ளது.