நசீர் அஹமட்டை கண்டால் கூட்டிவாருங்கள், விவாதத்துக்கு அழைத்து வாருங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நசீர் அஹமட் எம்.பியின் பகிரங்க சவாலுக்கு பதில் வழங்கியுள்ளார்.
நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்துக்கு தான் தயார், பகிரங்க வெளியில் விவாதத்துக்கு அழைப்பு விடுத்ததன் பின்னர், நசீர் அஹமட் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுப்பது ஏன் எனவும் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், குறித்த ஊடகம் ஏற்பாடு செய்யும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.