கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று (07) காலமானார்.
லங்கா சமசமாஜ கட்சியில் இருந்து அரசியலுக்கு வந்த ராஜா கொல்லூர் நாட்டின் மூத்த அரசியல்வாதி ஆவார்.
அவர் இறக்கும் போது ராஜா கொல்லூருக்கு 83 வயது ஆகும்.
இவர் வட மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 2020 ஆகஸ்ட் 31ஆம் திகதி சத்திய பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)