கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் ஆக ஃபைசர் தடுப்பூசி புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்கியதாக இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு டோஸ்களைப் பெற்ற 20 பேரின் இரத்த ஆன்டிபாடிகளை ஒரு மாதத்திற்கு முன்பு மூன்றாவது டோஸ் எடுத்தவர்களின் இரத்த ஆன்டிபாடிகளுடன் இஸ்ரேலிய ஷெபா மருத்துவ மையம் மற்றும் இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் மத்திய வைராலஜி ஆய்வகம் ஆகியவை ஆய்வொன்றில் ஒப்பிட்டுள்ளன.
"ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸ் எடுத்தவர்களில், ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிரான எதிரிப்பு நடவடிக்கை குறைந்த அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது," என்று ஷெபாவின் தொற்று நோய் பிரிவின் இயக்குனர் டாக்டர் கில்லி ரிகோவ் கூறினார். (யாழ் நியூஸ்)