நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் உள்ள மூன்றில் இரண்டில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன நியூஸ்வயருக்கு தெரிவித்தார்.
இருப்பினும், 2வது ஜெனரேட்டர் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.
இதனால் இன்றும் நாளையும் மின் தடை அமுல்படுத்தப்படும் என சுலக்ஷனா ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாரிய செயலிழப்பு காரணமாக, வெள்ளிக்கிழமை (03) இலங்கை நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடையை எதிர்கொண்டது. (யாழ் நியூஸ்)