டொலர்கள் மூலம் செலுத்தினாலே தவிர விமான எரிபொருளை இனி வழங்க மாட்டோம் என எரிசக்தி அமைச்சு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் அதில் அரச வங்கிகள் ஊடாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணம் செலுத்துமாறு தேசிய விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மின்சார சபை போன்ற பல அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் கடனாக வழங்கப்படுவதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிச்சுமை அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)